பொது செய்தி

தமிழ்நாடு

மலையடிவாரங்களில் தனிமை மையம்; 10 படுக்கையுடன் பயன்பாட்டிற்கு வந்தது

Added : மார் 23, 2020
Share
Advertisement

கம்பம் : தமிழக கேரள எல்லையை இணைக்கும் கம்பமெட்டு, லோயர்கேம்ப் மற்றும் போடிமெட்டு பகுதியில் மருத்துவத்துறை சார்பில் சந்தேகப்படும் நபர்களை தனிமைப்படுத்த, தனிமை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 10 படுக்கைகளுடன், டாக்டர், செவிலியர்கள் உள்ளனர்.

கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்களை முறையாக ஆய்வக பரிசோதனை பண்ணினால் தான் உறுதிப்படுத்த முடியும். காய்ச்சலால் வருபவர்களை அனுமதிக்கவும் முடியாது. எனவே தேனி மாவட்டத்தையும் கேரளாவை இணைக்கும் கம்பமெட்டு, லோயர்கேம்ப், போடிமெட்டு ஆகிய இடங்களில் மருத்துவக்குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

கேரளாவிலிருந்து வருபவர்களை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதிக்கும் போது, அதிக காய்ச்சலுடன் வருபவர்கள் கணிசமாக உள்ளனர். எனவே அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க, எல்லையோர மலையடிவாரங்களில் ''தனிமை'' மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. டாக்டர், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து சந்தேப்படும்படி வருபவர்களை இந்த மையத்தில் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X