சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை: தந்தை உட்பட மூவர் கைது

Added : மார் 23, 2020
Share
Advertisement

பழநி : பழநியில் மூன்று மாத பெண் குழந்தையை விற்ற தந்தை உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரையை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம் 30, மனைவி தனலட்சுமி 26. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். 2019 டிசம்பரில் செல்வம் தனது குடும்பத்துடன் பழநிக்கு வந்தார். தனலட்சுமி 3 மாத குழந்தையை கணவரிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, கணவருடன் மூன்று குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். தனது குழந்தையை காணவில்லை என பழநி டவுன் போலீசாரிடம் தனலட்சுமி புகார் அளித்தார்.

விசாரணையில், வறுமை காரணமாக நான்கு பெண் குழந்தைகளை வளர்ப்பது சிரமம் என கூறி தந்தை செல்வமே தனது மூன்று மாத பெண் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. குழந்தையை நண்பர்களான முடக்குப்பட்டி, ரவி மற்றும் ஜான் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனபள்ளியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் விற்றுள்ளனர்.

இதற்காக பழநிக்கு வந்து குழந்தை காணாமல் போனதாக நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு விஜயலட்சுமியிடம் இருந்த குழந்தையை போலீசார் மீட்டு தாய் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் தந்தை செல்வம், ரவி, விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X