பொது செய்தி

தமிழ்நாடு

வெயிலால் 'வெம்மை' நோய் அபாயம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

செம்பட்டி: ஆத்துார், சின்னாளபட்டியில் பகலில் கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கன்னிவாடி, செம்பட்டி, ஆத்துார், சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி பகுதிகளில் போதிய மழை இல்லை. கிணறு, ஆழ்துளை நீராதார அமைப்புகளில் நீர்மட்டம் வெகுவாக குறையத் துவங்கியுள்ளது. இதனால் சாகுபடி பணிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. சில நாட்களாக, இப்பகுதியில் அதிகரித்து வரும் வெப்பத்தால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோடை துவங்கும் முன்பே வெம்மையின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக, பரவலாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் நேற்று ஓரிரு இடங்களில், அவ்வப்போது மேகமூட்டம் மட்டுமே இருந்தது. அதிக வெப்பத்தின் தாக்கத்தால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆத்துார், சின்னாளபட்டி சுற்றுப்புற கிராமங்களில், பரவலாக வெம்மை நோய்களின் தாக்கம் வெளிப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை, பலர் அம்மை நோய் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ளனர். தண்ணீரை காய்ச்சி குடிக்கவும், அதிக தண்ணீர் குடித்தல், நீர்ச்சத்து மிக்க பழங்கள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறையினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X