பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுக்க கபசுர குடிநீர்; சித்த மருத்துவமனைகளில் இலவசம்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
coronavirus,Covid_19india,coronaupdatesindia,corona,கொரோனா,வைரஸ்,இந்தியா

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு சித்த மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்குவது துவங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, 'மக்கள் ஊரடங்கு' உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.'சளி, காய்ச்சல், இருமல் வராமல் தடுத்தால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம்; அதற்கு, கபசுர குடிநீர் கை கொடுக்கிறது' என, சித்தமருத்துவர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில், 16ம் தேதி வெளியானது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள, சித்த மருத்துவ அலுவலர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு இலவசமாக, கபசுர குடிநீர் வழங்கும் பணி துவங்கியுள்ளது.


latest tamil news



கபசுர குடிநீர், 15 வகையான மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்கள், கபசுர குடிநீரை, இலவசமாக பெற்றுக் கொள்ளும்படி, அரசு சித்த மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான, துண்டு பிரசுரங்களும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamizhan - NYC,யூ.எஸ்.ஏ
23-மார்-202022:05:51 IST Report Abuse
Thamizhan இந்த மருந்து / குடிநீர் குடித்தால் கொரோனா வராது என்று இல்லை. தயவு செய்து இதை நம்பாதீர்கள், இந்த வைரஸ்கு இன்னும் மருந்து வரவில்லை, வீட்டுக்குள் இருங்கள், சோப்பு போட்டு கை கழுவுங்கள், கொரோனா இல்லை என்றால் மாஸ்க் போட வேண்டாம். 14 நாட்கள் எங்கும் போகாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
23-மார்-202020:39:06 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     உங்கள் ஊரில் எப்படி இப்படி வெளிப்படையா """ ஹைட்ராக்சி குளோரோகுயின்"" என்று வெளி இடுகிறார்கள் தெரியவில்லை அனால் ஒன்று இது கண்டிப்பாக இப்போ எந்த கடையிலும் கிடைக்காது பயம் வேணாம் , ஏன் எனில் உங்கள் ஊரில் DR preion இல்லாமல் மருந்து கடைக்காரன் மருந்து தந்து விடுவான் இங்கே என்ன பிஸ்தா இருந்தாலும் நீ DR பார்த்தபிறகு உன் வீட்டிற்கு அருகே உள்ள மருந்து கடையில் தான் வாங்கணும் அவனும் உடனே கொடுத்து விட மாட்டான் உன் பேர் சில DOB போன்றவரை கேட்டபிறகு மேலும் ஒரு PHARMACIST தான் கொடுப்பார் அதை விளக்குவார் அப்புறம் ஒன்னு சொல்லுவார் இந்த டோஸேஜ் நடுவில் நிறுத்திவிட்டால் டெஸ்டரொய் செயின்கள் என்று சொல்லி கொடுப்பார் ஒரு amoxcilin இதற்கே பயப்படுவார் ஆனா நம் மருந்து காரர் உடனே எடுத்து கொடுப்பார் , ஆகவே நீங்கலாக சென்று உடனே இதை வாங்கலாம் என்று எண்ணாதீர்கள் எனக்கு தெரிந்து இது கிடைக்காது உங்களுக்கு தெரியும் இந்த குளூரோகுய்ன் என்பது நாம் மலேரியா ஜுரம் வந்தா கொடுப்போம் என் எனில் இந்த ஹைட்ராக்சி குளோரோ குயின் 200 mg மேல் உபயோகித்தால் தீங்கு ( நான் விவரிக்க விரும்பவில்லை ) நைஜீரியாவில் இது வேறுமாதிரி விளைவு என்று கேள்வி பாடோம் அஃகவே நீங்களே வாங்கி கொள்ளாதீர்கள் நண்பர்களே முறையான Dr சொன்ன பிறகு இறங்குங்கள் , டிரம்ப் என்ன Dr இல்லையே இதை ஏன் அமெரிக்கன் மெடிக்கல் கவுன்சில் சொல்லவில்லை அவர் நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி உடனே மருந்து உள்ளது என்று சொல்லை வாயை அடைக்க பார்க்கிறார்
Rate this:
Share this comment
Cancel
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
23-மார்-202019:47:52 IST Report Abuse
K.GOPINATHRAJA கபசுர குடிநீர் சூர்ணம் என்னும் மருந்து கப அதாவது குளுமை,ஜலதோஷத்தினால் வரும் சுரத்திற்கு வழங்கப்படும் மருந்து ஆகும். நம் உடலின்நோய்களை தீர்மானிப்பது நீர், நெருப்பு, கற்று ஆகிய மூன்று செயல்படும் பூதங்கள் ஆகும்.நம் உடலில் நோய்கள் தோன்றாமல்இருக்க இம்மூன்று குற்றங்களை தன்னளவில் அதாவது அவை இருக்கவேண்டிய அளவில் இருக்கவேண்டும். இம்மூன்று குற்றங்களை தன்னளவில் சமநிலையில் இருக்க வைப்பது நம் உணவு பழக்கங்கள் ஆகும். இந்த உணவு பழக்கங்களை நாம்தமிழர் நன்கு வகுத்து தந்துள்ளனர். வைரஸ் அம்மை போன்ற தோற்று நோய்கள் பரவும்போது தூய்மையாக எளிய உணவுகளை கொள்வதுடன் உடல் தூய்மையை பேணவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X