பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அபாயம்: மின் கட்டணம் செலுத்த சலுகை

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

சென்னை: இந்த மாதம், மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், முந்தைய கட்டணத்தையே செலுத்தும்படி, தமிழக மின் வாரியம் அறிவித்து உள்ளது.



latest tamil news



தமிழகத்தில், வீடுகள், கடைகள் உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில், மின் ஊழியர்கள், இரு மாதங்களுக்கு, ஒருமுறை நேரில் சென்று மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படும்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள, பலரும் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இதனால், மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஊழியர்கள், மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். எனவே, இம்மாதம் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய மாத கட்டணத்தையே செலுத்துமாறு, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.


latest tamil news



இது குறித்து மின் வாரியம், நேற்று (மார்ச் 22) விடுத்த செய்தி குறிப்பு: கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக, தாழ்வழுத்த இணைப்புகளில், 2020 மார்ச் மாத பட்டியலுக்கு, 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை, 'மீட்டர் ரீடிங்' எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், ஜனவரி, பிப்., மாத கணக்கீட்டின்படி, பணம் செலுத்த கோரப்படுகிறது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும். மின் கட்டண மையங்களுக்கு வருவதை தவிர்த்து, ஏற்கனவே தெரிவித்தபடி, இணையதளம், மொபைல் செயலி போன்ற, 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணத்தை செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Gurusamy - Toronto ,கனடா
24-மார்-202005:06:57 IST Report Abuse
Ramalingam Gurusamy கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மின் பயனீட்டு அளவு எடுப்பது சிரம ம். இதனை தவிர்க்க ஒவ்வொரு நுகர்வோரும் தாங்களே ரீனின் எடுத்து மொபைல் மெஸேஜ், அஞ்சல் அட்டை மூலம் மின்சார வாரிய அலுவலகத்தின் முகவரி, வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் ரீடிங் பெற்றுக் கொண்டமைக்கு மின் பிரிவு அலுவலகம் உறுதி தர வேண்டும். அது போன்று கட்டணத்தை மொபைல் மற்றும் இணையதள வசதிகளின் மூலம் செலுத்தும் பொழுது பத்து நாட்கள் கூடுதலாக இருபது நாட்களுக்குப் பதிலாக கட்டணம் செலுத்திட முப்பது நாட்களாக அவகாசத்தை அதிகரிக்க வேண்டும். இது மூன்று மாதங்கள் தொடர வாய்ப்பு வழங்கிடலாம். உரிய அறிவிப்புகளை வட்டார பிரிவு அலுவலகங்கள் அவ்வப்டபொழுது வாட்ஸ்அப், நாளிதழ்களில் வெளியிட்டு தமிழக அரசு நுகர்வோருக்கு உதவிட வேண்டும்.
Rate this:
Cancel
Senthil kumar - coimbatore,இந்தியா
23-மார்-202018:40:05 IST Report Abuse
Senthil kumar ஏற்கனவே தொழில்துறைகள் நிலைகுலைந்த நிலையில் , கொரோனா வைரசால் ஏனைய தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கட்டணம் செலுத்தும் தேதியை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி சலுகை கொடுத்தால் நல்லது.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-மார்-202018:08:11 IST Report Abuse
ஆரூர் ரங் சென்ற மாதத்தைவிட கூடுதலாகத்தான் ஆகியிருக்கும் . எனவே செல்ப் SELFஅசெஸ்மென்ட் என தானாகவே கணக்கிட்டு கட்டவிடலாம் .இல்லையெனில் மின்வாரியக் கடன் கூடுதலாகும் .மேலும் பிற்காலத்தில் பாக்கிக்காட்டவேண்டியது அதிகமாக இருந்தால் நுகர்வோருக்கும் கடினம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X