பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் முடங்கிய மாநிலம்: குடும்பங்களுக்கு நிதி அறிவித்த முதல்வர்கள்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Andhra, Telangana, CoronaVirus, ஜெகன்மோகன்_ரெட்டி, சந்திரசேகர்ராவ், ஆந்திரா, தெலுங்கானா, முதல்வர், கொரோனா வைரஸ்

ஐதராபாத்: கொரோனா பாதிப்பால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கப்படும் என அம்மாநில முதல்வர்கள் அறிவித்ததை அடுத்து, ரேஷன் அட்டை காரர்களுக்கு நிதி அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பின் பேரில் நேற்று (மார்ச் 22) நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்களை முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் மார்ச் 31 வரை மாநிலம் முழுவதும் முடக்கப்படும் என அறிவித்துள்ளனர்.


latest tamil news



ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள், வரும் 29ம் தேதியே வழங்கப்படும். ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 வழங்கப்படும், என அறிவித்தார். அதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியதாவது: தொற்றுநோய் சட்டம் 1897ன் கீழ், மாநிலம் முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை முழு அடைப்பு செய்யப்படுகிறது. இந்தக் காலத்தில், அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்தும். மாநிலம் முழுவதும் வெள்ளை ரேஷன் அட்டை வைத்திருக்கும் 87 லட்சம் குடும்பத்தினருக்கு 12 கிலோ அரிசி இலவசமாகவும், ரூ.1,500ம் வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மார்-202019:45:55 IST Report Abuse
 Muruga Vel சந்திரசேகர் ராவ் பாத்தா பாவமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
23-மார்-202016:40:27 IST Report Abuse
karutthu வெள்ளை ரேஷன் அட்டை இன்னுமா இருக்கு ? இப்போ தான் ஸ்மார்ட் கார்டு வந்து விட்டதே தெலுங்கானா விற்கு இன்னும் வரவில்லையா ???
Rate this:
Share this comment
Cancel
Murthy - Bangalore,இந்தியா
23-மார்-202013:08:03 IST Report Abuse
Murthy தேர்தல் வந்திருந்தாள் இவர்களும் பணம் கொடுத்துஇருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X