பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : மார் 23, 2020
Share
Advertisement

எழுத்தை இழக்கும் பெயர் பலகை: கோபி அருகே காமராஜ் நகரில், பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி முன்புள்ள பெயர் பலகை துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ய என்ற எழுத்து அழிந்து, ப என மாறி விட்டது. அடுத்தடுத்த எழுத்துக்களுக்கும் இதே கதி ஏற்பட்டு, அர்த்தம் மாறும் அபாயம் உள்ளது. ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும்போதே, பலகையை பெயின்ட் அடித்து, எழுத்துக்களும் எழுதி புதுப்பிக்க வேண்டும் என்று, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எச்சரிக்கை போர்டு வைத்தும் பயனில்லை: மொடக்குறிச்சி யூனியன், கணபதி பாளையம் பஞ்., காமராஜர் நகரில் சேகரமாகும் குப்பையை, ஈரோடு - கரூர் சாலையோரம் கொட்டுகின்றனர். எச்சரிக்கை போர்டு வைத்தும், அதை உதாசீனப்படுத்தி, குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குவிக்கப்பட்ட குப்பையை அகற்றி, அறிவிப்பை மீறி, குப்பை கொட்டு வோருக்கு அபராதம் விதிக்க, அப்பகுதிவாசிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

கான்கிரீட் உதிரும் யூனியன் ஆபீஸ்: சென்னிமலை யூனியன் அலுவலகத்தின், இரண்டாவது தளத்தில் கான்கிரீட் காரை பெயர்ந்து விழுவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது. உதிர்ந்த பல இடங்களில் கம்பி தெரிகிறது. காரை விழும் நேரத்தை யாரும் கணிக்க முடியாது. மக்கள் தலையில் அல்லது அதிகாரிகள் தலையில் விழுந்தாலும் விபரீதம், விபரீதம் தானே? எனவே மெத்தனப்போக்கை கடைபிடிக்காமல், விரைவில் சீரமைப்பு செய்தால் கட்டடத்துக்கு மட்டும் நல்லதல்ல... என்பதை சொல்ல வேண்டுமா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X