தமிழ்நாடு

உயிரை காக்க எழுச்சி; பொது இடங்கள் 'வெறிச்': மக்கள் ஊரடங்குக்கு 100 சதவீத ஆதரவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மக்கள் ஊரடங்கால் பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டமின்றி பொது இடங்கள் வெறிச்சோடின.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில், மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்கும் வகையில், நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு, தனியார், மினி பஸ்கள் இயங்காததால், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளும் மூடப்பட்டன. லாரி பேட்டையில், 3,000க்கும் மேற்பட்ட லாரிகள் ஓரம் கட்டப்பட்டன. ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், விசைத்தறி கூடங்களும் தொழிலாளர்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் வெறிச்சோடியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் மூடப்பட்டன. மருத்துவமனைகள், மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் மட்டும் செயல்பட்டது. மாநகரின் பிற பகுதி அம்மா உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்க்குகள் திறந்திருந்தன. ரயில்கள் நிறுத்தப்பட்டதால், ஈரோடு ஸ்டேஷனுக்குள் பயணிகள் செல்லாத வகையில், ஸ்டேஷன் வாயில் முன்பகுதியில் கயிறு கட்டி தடை செய்யப்பட்டது. மக்கள் ஒத்துழைப்புடன், 100 சதவீத வெற்றி பெற்றது.


* சென்னிமலையில் 7:00 மணிக்கு ஊரடங்கு தொடங்கியது. ஆதரவு தெரிவித்து கடைகள், ஓட்டல்கள் மற்றும் கைத்தறி, விசைத்தறி கூடங்கள் அடைக்கப்பட்டன. பெருந்துறையிலும் அனைத்து கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட், வாரச்சந்தை என அனைத்து பகுதிகளிலும், கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சிப்காட்டில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை.


* சிவகிரி பஸ் ஸ்டாண்ட், மொடக்குறிச்சி-சோலார், சோலார்-கரூர் ரோடுகளில் வாகன போக்குவரத்து அறவே காணப்படவில்லை. மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, உள்ளிட்ட பகுதியில், கடைகள் அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.


* கொடுமுடி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பரிகார ஸ்தலமான கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.


* கோபி பஸ் ஸ்டாண்ட் நேற்று அதிகாலை முதல் வெறிச்சோடியது. மொடச்சூர், சத்தி, ஈரோடு, பாரியூர் சாலைகளில், அனைத்து கடைகளும் மூடப்பட்டன. நம்பியூர், கவுந்தப்பாடி, டி.என்.,பாளையம் பகுதிகளும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடின. கோபி அரசு மருத்துவமனையில் உள்ள, கோபி அம்மா உணவகம் வழக்கம்போல் இயங்கியது.


* புன்செய்புளியம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் வளாகம், கோவை சாலை, பவானிசாகர் சாலை பகுதிகளில், மருந்து கடைகள் தவிர, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட, 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. அம்மா உணவகம் இயங்கியது. இறைச்சி கடைகள் செயல்பட்டதால், மக்கள் கூட்டம் காணப்பட்டது.


* சத்தியமங்கலத்தில், மைசூர் டிரங்க் ரோடு, கோவை சாலை, கோபி சாலை என அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. மசூதி, தேவாலயம் மற்றும் திருமண மண்டபங்களும் அடைக்கப்பட்டது.


* பவானிசாகர், தாளவாடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பால் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் தவிர அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் ஊரடங்கு, 100 சதவீதம் கடைபிடிக்கப்பட்டது.


* அந்தியூர், தவிட்டுப்பாளையம், பஸ் ஸ்டாண்ட், ராஜவீதி, சிங்காரவீதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. ஓட்டல், நகைக்கடை, பேக்கரி, மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதேபோல் பவானி பழைய, புது பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X