பொது செய்தி

தமிழ்நாடு

தாய்லாந்தை சேர்ந்த இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஈரோடு: பெருந்துறையில், கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும், தாய்லாந்து நாட்டை சேர்ந்த, இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக, கலெக்டர் கதிரவன் நேற்று கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஐந்து பேரில், இருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், அவர்களது உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டினரை சந்தித்து பேசியவர்கள், அவர்களது குடும்பத்தினர், 120 பேர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். பவானியில் ஒரு மில்லில், வெளிமாநில தொழிலாளர்கள் இருவருக்கு, காய்ச்சல் இருந்தது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஆர்.டி., ஆஸ்பத்திரியில் ஆய்வு: பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவமனையில், தாய்லாந்து நாட்டினர் இருவர், கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நிலையில், மூன்றாவது நாளாக நேற்றும் கலெக்டர் கதிரவன், நேரில் சென்று ஆய்வு செய்தார். கொரோனா வார்டுகளை ஆய்வு செய்த அவர், போர்க்கால அடிப்படையில் கூடுதலாக, 100 படுக்கைகள் கொண்ட வார்டுகளை அமைக்கும்படி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X