பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு நாளில் 4 ஜோடிகளுக்கு 'டும்டும்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

கோபி: கோபியில், நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கோபி பகுதி திருமண மண்டபங்களில், முன்பதிவு செய்யப்பட்ட திருமண சுபநிகழ்ச்சிகள், உறவினர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. கோபி சீதா கல்யாண மண்டபத்தில், ஐந்து சுப நிகழ்ச்சிகளுக்கு நேற்று பதிவு செய்யப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவால், ஒரே ஒரு திருமண நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதேசமயம் கோபி ராமாயம்மாள் திருமண மண்டபம், முத்து மகால் மற்றும் கரட்டடிபாளையம் கார்த்திகேயன் மகால் ஆகிய மூன்று மண்டபங்களில், தலா ஒரு திருமணம் நடந்தது. அதிகாலை, 5:00 மணி முதல் காலை, 7:00 மணிக்குள் நடந்து முடிந்ததாக, மண்டப நிர்வாகிகள் தெரிவித்தனர். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தவர்களை, கிருமி நாசினி கொண்டு, கை கழுவிய பிறகே அனுமதிக்கப்பட்டதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், இரு ஜோடிகளுக்கு திருமணம் செய்ய, நேற்று பதிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ், தடுப்பு நடவடிக்கையால், கோவில்கள் அடைக்கப்பட்டதால், இரு திருமணங்களும் நடக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X