பொது செய்தி

தமிழ்நாடு

'ஈரோடு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை': ஐ.எம்.ஏ., மாநில தலைவர் விளக்கம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஈரோடு: ''ஈரோட்டில் உள்ளவர்கள் தற்போதைய சூழலில் அச்சம் கொள்ள தேவையில்லை. விழிப்புடன் இருப்பது அவசியம்,'' என, இந்திய மருந்து சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஈரோட்டில், கொரோனா அறிகுறி உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர், என்பதை உணர்ந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்கள் இருந்த பகுதியில் உள்ளவர்கள், சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். அப்பகுதியில் உள்ளவர்களும், மற்றவர்களும் மிகவும் சுகாதாரமாக, சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள், தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் பழகியவர்கள், உடன் இருந்தவர்கள், அவர்கள் வந்து சென்ற இடங்களில் உள்ளவர்கள் தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். அதேநேரம், மற்றவர்கள் தேவையின்றி வெளியே செல்லுவது, தொட்டு பேசுவது, பொருட்கள் உட்பட எதையும் தொடுவதை தவிர்க்க வேண்டும். இந்த சூழலை மிக, மிக கவனமாக நாம் கையாள்வதன் மூலம், புதிய தொற்று உடைய நபர் உருவாக மாட்டார். உடல் நலக்குறைவானவர் கூட, கூட்டமாக மருத்துவமனை செல்லாமல், பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக, பிற நாடு, பிற மாநிலம் சென்று வந்தவர்களிடம் இருந்து விலகி இருத்தல் அவசியம். தொற்று உள்ள பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளுக்கு நாம் ஒத்துழைத்தால், மேலும் பரவாமல் தடுக்கலாம். சந்தேகம் இருப்பவர்கள், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X