ஆசனூர் வனப்பகுதியில் வேட்டையாட துப்பாக்கியுடன் காரில் வந்த மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசனூர் வனப்பகுதியில் வேட்டையாட துப்பாக்கியுடன் காரில் வந்த மூவர் கைது

Added : மார் 23, 2020
Share

புன்செய்புளியம்பட்டி: வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட, நாட்டுத்துப்பாக்கியுடன் காரில் வந்த மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆசனூர் மலைப்பகுதியில், நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுற்றித்திரிவதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, ஆசனூர் வனத்துறையினர், ஆசனூர் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே, மதுவிலக்கு போலீசாருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹூண்டாய் காரை சோதனையிட்டபோது மூவர் இருந்தனர். ஒரு நாட்டுத்துப்பாக்கியும் இருந்தது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன், 45, மணிகண்டன், 38, செல்வராஜ், 53, என்பதும், வேட்டையாடுவதற்காக வந்ததும் தெரிந்தது. மூவரையும் கைது செய்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

மான் வேட்டையாடியவர் கைது: பவானிசாகர், விளாமுண்டி ரேஞ்சர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள், கருங்கரடு வனத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர், புள்ளிமானின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரை வளைத்து பிடித்து விசாரித்தனர். பவானிசாகர் அருகேயுள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்த வேலுசாமி, 46, என்பது தெரிந்தது. சுருக்கு கம்பி பயன்படுத்தி, புள்ளி மானை வேட்டையாடியதாக கூறினார். கைது செய்த வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X