பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் இறைச்சி கடைகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்கள் ஊரடங்கு உத்தரவு, 100 சதவீதம் கடைபிடிக்கப்பட்டது. அதிகாலை, 5:00 முதல், 7:00 மணி வரை ஆவின் பால் பூத்துகள் இயங்கின. ஒரு சில, பெட்டிக்கடைகள் திறக்கப்பட்ட போதும், போலீசார் ரோந்து வந்ததை பார்த்ததும் அவற்றையும் மூடினர். போலீசார் யாரையும், கட்டாயப்படுத்தவோ, மிரட்டவோ இல்லை. நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால், அசைவ பிரியர்கள் நேற்று முன்தினம் இரவு சிக்கன் கடைகளில் திடீரென குவிந்தனர். கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக, வியாபாரமின்றி தவித்த கோழி இறைச்சிக்கடை வியாபாரிகள், நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை வியாபாரம் செய்தனர். இதனால், திடீரென கோழி இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை பார்த்த மீன் வியாபாரிகள் திடீரென, நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல், நேற்று காலை, 7:00 மணி வரை மீன் கடையை திறந்து வைத்திருந்தனர். ஆட்டிறைச்சி கடைகளில், நேற்று அதிகாலை, 4:00 மணிமுதல், 9:00 மணி வரை கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. காய்கறி மார்க்கெட், மண்டி வீதி, பூ மார்கெட், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் ஊரடங்கால் வெறிச்சோடின. நகராட்சி துப்புரவு ஊழியர்கள், பஸ் ஸ்டாண்டை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X