பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி: மேச்சேரி, சந்தைப்பேட்டை அருகே, மேச்சேரி - ஓமலூர் நெடுஞ்சாலையோரம், மழைநீர் வடிகால் உள்ளது. அதன் மேற்பகுதியை மூடி வைக்க பயன்படுத்திய கற்கள் அகற்றப்பட்டு, வடிகாலில் போடப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேற வழியின்றி, அப்பகுதியில் குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், அருகில் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். வடிகாலை தூர்வார, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீணாகும் குடிநீரால் சாலை சேதமாகும்: அம்மாபாளையம் நீருந்து நிலையத்திலிருந்து, பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு காவிரி குடிநீர் வருகிறது. அதில், சந்தியூர் ஆட்டையாம்பட்டியில், ஆறு மாதமாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது. கோடையில், குடிநீர் தட்டுப்பாட்டால், மக்கள் தவிக்கும் நிலையில், குழாயை சீரமைக்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு, குளம்போல் தேங்கும் தண்ணீரால், சாலையும் சேதமடையும் சூழல் உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து: இளம்பிள்ளை, சந்தைப்பேட்டையில், உழவர் சந்தை அருகே, சாலை நடுவே, 10 ஆண்டுக்கு முன் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டது. அதைச்சுற்றி தொட்டி கட்டி, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இரு மாதத்துக்கு முன், ஆழ்துளை குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க, அங்கிருந்த சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் கட்டப்படாமல் உள்ளதால், இரவில், அந்த வழியாக செல்வோர், சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் குழாய் மீது மோதி காயமடைகின்றனர்.

கழிவுநீரால் துர்நாற்றம்: இடைப்பாடி நகராட்சி, க.புதூர், அருந்ததியர் தெருவில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள பூங்கா அருகே, சாக்கடை கால்வாயில், நீண்ட நாளாக, கழிவுநீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இதை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கண்டுகொள்ளாததால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தொற்று நோய் ஏற்படும் முன், கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த, நடவடிக்கை எடுப்பது அவசியம்.

குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்: சங்ககிரி, மோரூர் மேற்கு ஊராட்சி, வேங்கிபாளையம், நாடார் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். அங்கு, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து, பயன்பாட்டில் உள்ளது. ஆனால், தொட்டி அடித்தளத்தில் கான்கிரீட் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. மேல்நிலை தொட்டியை சீரமைக்க, அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X