தமிழ்நாடு

வீட்டுக்குள் குடும்பத்துடன் இருந்த மக்கள்; சுய ஊரடங்கால் சேலம் முழு அமைதி

Added : மார் 23, 2020
Share
Advertisement

சேலம்: வீட்டுக்குள், குடும்பம் சகிதமாக மக்கள் கட்டுப்பாடுடன் இருந்து, சுய ஊரடங்கை வெளிப்படுத்தியதன் மூலம், ஒருநாள் சேலம், அமைதியை தழுவியது.
உலகை அச்சுறுத்தும், 'கொரோனா' பரவுவதை தடுக்க, நாடு முழுவதும், நேற்று, சுய ஊரடங்கு கையாளப்பட்டது. அதற்காக, ஒன்பது அம்ச நடவடிக்கைகளை அறிவித்து, இரு அரசுகளும் வலியுறுத்தின. அதையேற்று, சேலம் மாவட்டத்தில், ஊரடங்கு முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது. பஸ்கள் ஓடாது என்ற அறிவிப்பை அடுத்து, ஆம்னி பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள், அறவே இயக்கப்படவில்லை. அதனால், அனைத்து சாலைகளிலும், ஹாரன் சத்தம், வாகன இரைச்சல் இன்றி, அமைதி நிலவியது. குறிப்பாக, வாகனங்கள் இல்லாத சாலைகளாக காண முடிந்தது. நடைப்பயிற்சி செல்வது கூட தவிர்க்கப்பட்டுள்ளது. சேலம், பழைய, புது பஸ் ஸ்டாண்டுகளில், பயணியர் வருகையின்றி வெறிச்சோடின. அதேபோல், ரயில்வே ஸ்டேஷன் ஆரவாரமின்றி இருந்தது. காந்தி மைதானத்தில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை பார்க்க முடியவில்லை. ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, லாரி மார்க்கெட், அம்மாபேட்டை, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், கடைகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதற்கேற்ப, ஆட்கள் நடமாட்டமின்றி, எல்லா பகுதிகளும் வெற்றிடமாகவே தோற்றமளித்தது. விரல் விட்டு எண்ணும் அளவுக்கே, இருசக்கர வாகனங்களும் சென்றன.

அதேபோல், மாவட்டத்தில், ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி மேட்டூர், சங்கிகரி, ஏற்காடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் காணப்படவில்லை. மாவட்டத்தில், ஒட்டுமொத்த மக்களும், குடும்பம் சகிதமாக வீட்டுக்குள்ளேயே தங்கியிருந்து, சுய ஊரடங்கை, முழுமையாக கடைபிடித்து, கட்டுப்பாடு, மன உறுதியை வெளிப்படுத்தினர். இதனால், சேலம் அமைதியை தழுவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X