பொது செய்தி

தமிழ்நாடு

அவசர வழக்குகள் மட்டும் விசாரணை: வக்கீல்கள் நீதிமன்றம் வரவேண்டாம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சேலம்: அவசர வழக்குகளை தவிர்த்து, மற்ற வழக்குகளுக்கு, வக்கீல்கள், வழக்கு சார்ந்தவர்கள், நீதிமன்றங்களுக்கு வர வேண்டாம் என, சேலம் வக்கீல் சங்கம் தெரிவித்துள்ளது.
சேலம் வக்கீல்கள் சங்க நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஸ்ரீனிவாசன், பாலகுமார், ராஜசேகரன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி, வக்கீல் ஸ்ரீதர் உள்ளிட்டோர், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு, தலைமை குற்றவியல் நீதிபதி முனுசாமி ஆகியோரை சந்தித்து, 'கொரோனா வைரஸ்' பாதிப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை குறித்து, நேற்று முன்தினம், ஆலோசனை நடத்தினர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, வக்கீல் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: இன்று முதல், ஏப்., 6 வரை, அவசர வழக்குகளான எமர்ஜென்ட், ஜாமின் வழக்குகள் மட்டும், நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வழக்குகளுக்கு ஆஜராகும் வக்கீல்கள் மட்டும், நீதிமன்றத்துக்கு வர வேண்டும். மற்ற வழக்குகளை விசாரணைக்கு எடுக்காமல் ஏப்., 6க்கு பின் எடுத்துக்கொள்ளப்படும். அந்த வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்கள், நீதிமன்றம் வரவேண்டாம். குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் சாட்சி விசாரணை நடக்காது. மார்ச் 23(இன்று) முதல், நூலகம், பெண் வக்கீல் அறை, குமாஸ்தா சங்கம், வக்கீல்கள் வளாகம் முற்றிலும் மூடப்படும். இதற்கு, வக்கீல்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X