பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் தங்கியுள்ள இந்தோனேஷிய 'உலமா'க்கள்: மருத்துவ பரிசோதனை நடத்த கலெக்டர் உத்தரவு

Added : மார் 23, 2020
Share
Advertisement

சேலம்: ''சேலம் மசூதியில் தங்கியுள்ள, இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 11 'உலமா'க்களுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
சேலம், கிச்சிப்பாளையம், ஜெய் நகரிலுள்ள மசூதியில், இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 'உலமா'க்கள், 11 பேர், கடந்த, 12 முதல் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், சமூக மக்களிடையே, மத பிரசாரம் செய்த அவர்கள், வரும், 25ல், மேட்டூரில் முகாமிட முடிவெடுத்துள்ளனர். விமானம் மூலம், சென்னை வந்த அவர்கள், முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின், சேலத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், 'உலமா'க்களுக்கு, மீண்டும் பரிசோதனை நடத்த, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமல் தங்கியிருப்பதாக, தகவல் வெளியானது. இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதுகுறித்து, கலெக்டர் ராமன் கூறுகையில், ''இதுதொடர்பாக விசாரிக்க, சேலம் ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ குழுவை அனுப்பி பரிசோதிக்கப்படும்,'' என்றார். முதல் கட்ட விசாரணையில், அவர்கள், 'விசா' முடிந்து, ஏப்., 6ல் சொந்த ஊர் புறப்படுவர் என, தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X