பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா வைரஸ்' எதிரொலி: 71 பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஓமலூர்: ஓமலூரில், 71 பஸ்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஓமலூர் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து, 71 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று, ஊரடங்கு உத்தரவால், பஸ்கள் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், சரக்கப்பிள்ளையூர் வட்டார மருத்துவ அலுவலர் ரமணன் தலைமையில் பொது சுகாதாரத்துறையினர், அதிநவீன கைத்தெளிப்பான் மூலம், 71 பஸ்களுக்கும் கிருமிநாசினி தெளித்தனர்.
விழிப்புணர்வு: காடையாம்பட்டி, பொம்மியம்பட்டியிலுள்ள மக்களுக்கு, நேற்று, அப்பகுதி இளைஞர்கள் இணைந்து, 'கொரோனா வைரஸ்' தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கஷாயம்(கபசுர குடிநீர்) வழங்கினர். ஓமலூரில், நேற்று முன்தினம் மாலை, த.மா.கா., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் அக்கட்சியினர், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

ஏலம் ஒத்திவைப்பு: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் நடப்பாண்டு ஏலம், இன்று நடக்கும் என, ஊராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், கொரோனாவால், மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக, தலைவாசல் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


* ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே, பாராம்பரிய ஞாயிறு சந்தை கூடவில்லை. இதனால், யாருமின்றி வெறிச்சோடியது. அதேபோல், சங்ககிரி வாரச்சந்தைக்கு, யாரும் காய்கறி கொண்டு வரவில்லை.


* சுற்றுலா பயணியர் கூட்டம் நிரம்பி வழியும் மேட்டூர் அணை பூங்கா வெறிச்சோடியது. காவிரியாற்றில் உள்ளூர் மக்கள் கூட குளிக்க வரவில்லை. அதேபோல், ஏற்காட்டுக்கும் சுற்றுலா பயணியர் வரவில்லை.


* இடைப்பாடியில், விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்து, ஊரடங்குக்கு ஒத்துழைத்தனர்.


* சுபமுகூர்த்தமான நேற்று, தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், திருமணம் நடத்த, சிலர் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு, கோவில் அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

* பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், அரளி பூ, குண்டுமல்லி, நந்தியாவட்டை உற்பத்தியாகிறது. அங்கு, பூக்கள் பறித்து, விற்பனைக்கு அனுப்பவில்லை. களை பறித்தல் உள்ளிட்ட விவசாய பணியும் நடக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X