சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'குடிமகன்' தர்ணா; போலீஸ் சமரசம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

இடைப்பாடி: இளம்பிள்ளையைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் மகன் விக்னேஸ்வரன், 28. இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, கையில் வெட்டுபட்டு வழியும் ரத்தத்துடன், இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் கவிதாவிடம், 'இளம்பிள்ளையைச் சேர்ந்த நான்கு பேர் வெட்டி விட்டனர். உடனே, கைது செய்தால் மட்டுமே சிகிச்சை பெறுவேன்' என, 'குடி'போதையிலிருந்த விக்னேஸ்வரன் கூறினார். இதற்கு, 'முதலில் சிகிச்சை பெறுங்கள். வழக்குப்பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, கவிதா கூறினார். அதில் திருப்தியடையாத விக்னேஸ்வரன், இடைப்பாடி - சேலம் பிரதான சாலையில் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். பின், இடைப்பாடி போலீசார் வந்து, அவரை சமாதானப்படுத்தி, மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X