சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் ஆப்பரேட்டர் 2 பேர் பலி

Added : மார் 23, 2020
Share
Advertisement

மேச்சேரி: வேன் மீது, பைக் மோதிய விபத்தில், பொக்லைன், கிரேன் ஆப்பரேட்டர்கள் உயிரிழந்தனர். மேச்சேரி, கொப்பட்டி ஊராட்சி, வானக்காரன் வளவைச் சேர்ந்தவர் பழனிசாமி, 24; பொக்லைன் ஆப்பரேட்டர். எம்.காளிப்பட்டி ஊராட்சி, சீராம்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்தகுமார், 20; கிரேன் ஆப்பரேட்டர். நேற்று முன்தினம் இரவு, 9:10 மணிக்கு, இருவரும், மேச்சேரியிலிருந்து ஓமலூர் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பழனிசாமி ஓட்டினார். கோல்காரனூர் அருகே சென்றபோது, முன்புறம் சென்ற சரக்கு வேன், திடீரென பக்கவாட்டில் திரும்பியது. அதை சற்றும் எதிர்பார்க்காத பழனிசாமி, வேன் மீது மோதினார். இதில், பழனிசாமி, அரவிந்தகுமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X