சேலம்: போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ.,யை திட்டிய, 'போதை' வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில், போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., ஜெகநாதன், நேற்று காலை, 10:25 மணிக்கு, பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக, ஹீரோ ?ஹாண்டா பைக்கில், 'போதை'யில் வந்த வாலிபரை நிறுத்தினார். ஆனால், அவர், சகட்டு மேனிக்கு, சிறப்பு எஸ்.ஐ.,யை பேசிவிட்டு, பைக்கில் தப்பினார். அவரை, பின் தொடர்ந்து விரட்ட, கலெக்டர் அலுவலக சந்திப்பில், பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ., வெங்கடாசலம், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது, தகாத வார்த்தைகளால் பேசியதை ஒப்புக்கொண்டு, அவரிடம், தள்ளாடியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், அந்த வாலிபர், டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டு, போலீஸ் பாணியில் விசாரணை நடந்தது. அதில், போதை இறங்கி பின் பேசினார். அப்போது, சேலம், கிச்சிப்பாளையம், மூவேந்தர் தெருவைச் சேர்ந்த சிவசாமி மகன் சிவப்பிரகாஷ், 34, தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரிவித்தார். பின், அவரை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE