4 கிலோ வெள்ளி கொலுசு லவட்டிய கும்பலுக்கு வலை| Dinamalar

4 கிலோ வெள்ளி கொலுசு 'லவட்டிய' கும்பலுக்கு வலை

Added : மார் 23, 2020 | |
சேலம்: நான்கு கிலோ வெள்ளி கொலுசுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை, போலீசார் தேடுகின்றனர். சேலம், குகை, காளியம்மன் கோவில் அருகே, பாலகாந்தி சாலையைச் சேர்ந்தவர் சரவணன், 40; திருவாக்கவுண்டனூரில், 'நியூ சரவணா' பெயரில், நகை தொழிலகம் வைத்துள்ளார். அதை, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, 9:30 மணிக்கு, கடை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக,

சேலம்: நான்கு கிலோ வெள்ளி கொலுசுகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை, போலீசார் தேடுகின்றனர். சேலம், குகை, காளியம்மன் கோவில் அருகே, பாலகாந்தி சாலையைச் சேர்ந்தவர் சரவணன், 40; திருவாக்கவுண்டனூரில், 'நியூ சரவணா' பெயரில், நகை தொழிலகம் வைத்துள்ளார். அதை, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, 9:30 மணிக்கு, கடை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, பக்கத்திலுள்ள தேங்காய்கடை வியாபாரி தகவல் தெரிவித்துள்ளார். உடனே, சரவணன் சென்றுபார்த்தபோது, நான்கு கிலோ வெள்ளி கொலுசு கொள்ளைபோனது தெரிந்தது. அதன் மதிப்பு, 1.2 லட்சம் ரூபாய். அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X