சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிட்காயின் மோசடி செய்தவரை கடத்திய 3 பேர் கைது

Added : மார் 23, 2020
Share
Advertisement

தலைவாசல்: பிட்காயின் மூலம் மோசடி செய்தவரை கடத்திய மூவரை, போலீசார் கைது செய்தனர். தலைவாசல், பெரியேரியைச் சேர்ந்தவர் தங்கவேல், 47; திருவண்ணாமலையில், 'பிட்காயின்' மூலம் தொழில் செய்து வந்தார். அப்போது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 15 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி, விளம்பரம் செய்தார். இதை நம்பி, பலர் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், கூறியபடி பணத்தை தராமல், பெரியேரிக்கு வந்து விட்டார். பாதிக்கப்பட்ட, திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கர், 39, பரசுராமன், 28, அன்பு, 48, ஆகியோர், கடந்த, 20ல் தங்கவேலை, அவரது வீட்டிலிருந்து, காரில் திருவண்ணா மலைக்கு அழைத்துச்சென்றனர். இதுகுறித்து, தங்கவேலுவின் மனைவி சுதாவுக்கு, போன் மூலம் தகவல் தெரிவித்து, பணம் கேட்டுள்ளனர். இதனால், சுதா, தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், திருவண்ணாமலை சென்று, தங்கவேலுவை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X