சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பார்' ஊழியர் கொலை வழக்கு: கட்டடத்தொழிலாளி சிக்கினார்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சங்ககிரி: 'பார்' ஊழியர் கொலை வழக்கில், கட்டடத் தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர். சங்ககிரி, தேவூர் அருகே, தண்ணீர்தாசனூரில், டாஸ்மாக் கடையொட்டி, அனுமதியின்றி இயங்கிய பாரில், ஆலச்சம்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, 30, பணிபுரிந்தார். கடந்த, 11ல், கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பூமணியூரைச் சேர்ந்த துரைராஜ், 34, உள்ளிட்ட சிலர், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், அக்கும்பல், ராமமூர்த்தியை வெட்டியதில், அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, காங்கேயம், நாமக்கல் நீதிமன்றங்களில், தலா ஒருவர் சரணடைந்தனர். தேவூர் போலீசார், நேற்று காலை, மூலப்பாதை அருகே, வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக, யமஹா பைக்கில் வந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் வேகமாக பைக்கை ஓட்ட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்து, போலீசார் விசாரித்தபோது, ஆவணிப்பேரூர் மேல்முகம், கரட்டுக்காட்டைச் சேர்ந்த முருகன், 22, என்பதும், 'பார்' ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிந்தது. பின், அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X