விடுபட்ட பாதாள சாக்கடையால் சாலை சீரமைப்பு பணியும் தள்ளிப்போவதால் அதிருப்தி

Added : மார் 23, 2020
Share
Advertisement

மேட்டூர்: விடுபட்ட பாதாள சாக்கடை பணியால், சாலை சீரமைப்பு பணியும் தள்ளிப்போவதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மேட்டூர் நகராட்சியில், நேரு நகர் உள்பட, 11 சாலைகளை சீரமைக்க, அரசு, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த நவ., 18ல், சாலை சீரமைப்பு பணியை தொடங்க, நேருநகரில் பூமிபூஜை நடந்தது. அதில் பங்கேற்ற, மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலையிடம், அப்பகுதி பெண்கள், தங்கள் வீதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்டதாக குற்றம்சாட்டினர். அதற்கு, நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார். இதையடுத்து, விடுபட்ட பகுதிகளில், சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற, அரசு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. எனினும், பணியை தொடங்க, இதுவரை, நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பூஜை போட்டு, நான்கு மாதமாகியும், நேரு நகர் மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்கும் பணி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், நேரு நகரில் விடுபட்ட பகுதியில், பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை, உடனடியாக தொடங்க, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X