விபத்துக்கு வழிவகுக்கும் சாலையோர மண் குவியல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஆத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் பரவிக்கிடக்கும் மண் குவியலால், விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆத்தூர் நகர் வழியாக செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உடையார்பாளையம், கால்நடை மருத்துவமனை, காமராஜர் சாலை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகள், அபாயகரமான பகுதியாக மாறி வருகிறது. அந்த இடத்தில், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தபடி மண் குவியல் பரவியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினாலே, சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். வேகமாக வரும் வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று சந்திக்க நேரிடுகின்றன. விபத்தை தவிர்க்க, 'பிரேக்' போட்டாலும், மணல் குவியலால், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து நிற்க முடியாமல் சற்று தூரம் வரை, சக்கரம் தேய்ந்தபடி இழுத்துக்கொண்டு செல்கிறது. இதனால், அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரிப்பதாக, மக்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், மிகுந்த அச்சத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துரித நடவடிக்கை எடுத்து, சாலையோர மண் குவியலை அப்புறப்படுத்தி, விபத்தில்லா பகுதியாக மாற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X