சீனா மூடி மறைத்த ரகசியம்; டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement

வாஷிங்டன்: 'சீன அரசு, கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருந்தது. அதனால் தான், அமெரிக்கா உட்பட உலக நாடுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியவில்லை' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.latest tamil news


சீனாவில் துவங்கிய, கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், சீனா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, சீனா ரகசியம் காத்துள்ளது. அதன் தீவிரம் குறித்து தெரியப்படுத்தாமல் இருந்தது. அதனால், மிகக் கொடூரமான நரக வேதனையை அந்த நாடு சந்தித்தது. அது, தற்போது உலகெங்கும் ஆட்டிபடைத்து வருகிறது. துவக்கத்திலேயே, சரியான தகவலை, சீனா தெரிவித்திருந்தால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், எச்சரிக்கையுடன், தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.


latest tamil news


சீனாவுடன நல்ல உறவில் உள்ளோம். சீன அதிபர், ஸீ ஜின்பிங், சிறந்த நண்பர். வைரஸ் பாதிப்பு, சீனாவில் தீவிரமடைந்தபோது, ஜின்பிங்குடன் பேசினேன். அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாக கூறினேன். அங்குள்ள பிரச்னை குறித்து அவர், சொல்லி இருக்கலாம். இந்த வைரஸ் பாதிப்பு வெளிப்படையாக தெரிய வந்த பிறகே, அமெரிக்காவுக்கும் தெரியவந்தது. முன்பே தகவல் தெரிந்திருந்தால், அதற்கான தீர்வை கண்டுபிடித்திருக்கலாம். வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அமெரிக்க மக்கள், வீடுகளிலேயே முடங்கியிருந்து, உயிர் பலி அதிகரிப்பதை தடுக்க வேண்டும். இந்த வைரஸ் பாதிப்பை தடுப்பதில், நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம். மிக விரைவில், வெற்றியைக் கொண்டாடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news


அமெரிக்காவில், 26 ஆயிரத்து, 686 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதிக வைரஸ் தொற்று உள்ள நாடுகளில், சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்த இடத்தில், அமெரிக்கா உள்ளது. அங்கு, 340 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில், அமெரிக்கா, ஆறாவது இடத்தில் உள்ளது.டாக்டருடன் வாதம்சமீபத்தில் ஒரு பேட்டியில், 'மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிகுளோராகுயின்' என்ற மருந்தை, கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம்' என, அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நாட்டின் புகழ்பெற்ற தொற்றுநோய் சிகிச்சை நிபுணர், டாக்டர் அந்தோணி பாசி, பங்கேற்றார். 'சோதனைகளில் இது உறுதி செய்யப்படவில்லை. அதனால், மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தை, கொரோனாவுக்கு வழங்க முடியாது' என, பாசி கூறினார்.'இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், இந்த மருந்து கொடுக்கலாம் என நான் கருதுகிறேன். அது மிகவும் சிறந்த மருந்து. இருந்தாலும், டாக்டர் சொல்வதை ஏற்கிறேன்' என, டிரம்ப் உடனடியாக பதிலளித்தார்.


latest tamil newsதுணை அதிபருக்கு சோதனை

அதிபர் டொனால்டு டிரம்புக்கு, வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து, சமீபத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில், துணை அதிபர் மைக் பென்ஸ் அலுவலகத்தில், ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து, மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி கரேன் பென்ஸ், பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிந்தது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-மார்-202019:58:33 IST Report Abuse
வெகுளி பாதிக்க பட்ட உலக நாடுகளுக்கு சீனா நஷ்டஈடு வழங்க வேண்டும்.... இந்த கோரிக்கையை நம்மவூர் கம்யூனிஸ்டுகள் முன்னிறுத்தி போராட வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202000:39:05 IST Report Abuse
SATHASIVAM PRAKASH Plz avoid china...If we avoid china our economy go down no problem....we have strentgh to screwten up the economy with the oyher nations....please ensure tax amount for chinese product 200 increase...And our own mobiles indian international quality electronics should be deveplod b focous on that....We have easily to capture the economy of the African continent business via through trade easily Indian ocean...Understand person very sharp...Know about our economy status.Jai Hind...our great business enterpruener in india coming forward to develop the electronic products superior quality features, low cost ,product development ideas,Marketing ideas...Im asking India have ECE engineers...develop the processor quadcore and circuits boards,panel led and than lead to capture marketing ideas develop....To reach the goal india is possible...But its tough...But its possible.
Rate this:
Share this comment
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
23-மார்-202021:49:54 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     உண்மை அவன் விஷத்தனத்தை பாருங்கள் அவன் ஊரில் என்ன நடந்தது என்று வெளியே சொல்லவில்லை இங்கு ஒரு Dr அந்த ஊரில் இந்தமாதிரி பாதிக்க பட ஒருஐந்து பேரை வெளி உலகிற்கு கொண்டு வந்து ( பயங்கர பாதுகாப்புடன் ) ஐந்து பெரிய நாடுகளின் Dr களின் கண்காணிப்பில் விட்டு இருந்தால் எந்த நாடு மருத்துவர் ஆவது மருந்து கண்டுபிடித்து இருஅப்பார் அவன் ஊரில் இப்போ குறைந்து விட்டது அவன் தயாராகி விட்டான் அவன் பொருள் தான் முக்கியமா tissue அவன் தான் சப்ளை இப்போ அவன் சொல்லும் ரேட் தான் இப்போ தான் நமக்கு இந்த நோயின் குணம் இதற்கே உங்கள் பங்கு சந்தை வீழ்ச்சி இப்போ அவன் சூப்பர் பவர் ஆகி உலகத்தியே சீந்ரகளை நோக்கி திரும்ப வைக்க போகிறான் உறுதி
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
24-மார்-202016:00:37 IST Report Abuse
VELAN Sபொதேள்னு போய் ஒன்னு இல்லை நாலு அணு குண்டை சீன அதிபர், ஸீ ஜின்பிங், தலையிலே போடணும் , டிரம்பு கூடிய சீக்கிரம் பண்ணுவாரு இதை . இந்த வாட்ஸாப்ப் காலத்திலே சீன அதிபர், ஸீ ஜின்பிங் மாதிரி ஒரு வடிகட்டின முட்டா பயல நான் பார்த்ததில்லை , உலக மனித இனத்தையே அழிப்பதர்க்கு ஒரு காரணமாகி விட்டான் இந்த ஸீ ஜின்பிங் . டிரம்பு சொன்னா மாதிரி முன்னமேயே சொன்னா , அமைதியா ஆராய்ச்சி பண்ணி ஒரு மருந்தை கண்டுபிடித்திருக்கலாம் , இப்ப பாரு , இந்த டென்ஷனில் மருந்து கண்டுபிடிக்க முடியாம உலக நாடுகள் திணறுகின்றன. அதாவது நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. இது என்னவெனில் நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும். இது இந்த ம பய ஸீ ஜின்பிங் கிற்கு சொல்லி கொடுக்க வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X