பொது செய்தி

தமிழ்நாடு

சமூக வலைதளத்தில் 'லைக்' மோகத்தால் மொபைல்போனுடன் சுற்றிய வாலிபர்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

தர்மபுரி: சமூக வலைத்தளங்களில், 'லைக்' பெறும் மோகத்தால், கொரோனா வைரஸ் பாதிப்பு விழிப்புணர்வு நடவடிக்கையை மதிக்காமல், இளைஞர்கள் சிலர், தர்மபுரியில் வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்ட், தெருக்களை போட்டோ, வீடியோ எடுக்க, நகரில் நேற்று சுற்றித்திரிந்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையும் சிலர், 'பேஸ்புக்' மற்றும் 'டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், 'லைக்' பெறும் மோகத்தால், நக்கல் செய்து, பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் காலை, 7:00 மணி முதல், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்கவும், மக்கள் ஊரடங்கு அறிவிப்பையும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி தர்மபுரியில், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு நேற்று வெறிச்சோடியது. பிரதமர் மோடியின் கோரிக்கையை மதிக்காமல், தர்மபுரி மற்றும் அதையொட்டிய பகுதிகளை சேர்ந்த சில இளைஞர்கள், பைக்கில் நகரில் வலம் வந்து, வெறிச்சோடிய இடங்களை தங்கள் மொபைல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் 'லைக்' வாங்க ஆர்வம் காட்டினர். அப்போது, அப்பகுதியில் கண்காணிப்பில் இருந்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X