தமிழ்நாடு

கொரோனா தடுப்புக்கு மக்கள் ஆதரவு: சாலைகள், ரயில்வே ஸ்டேஷன் 'வெறிச்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு தெரிவித்ததால், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே ஸ்டேஷன் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடின.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி நேற்று காலை, 7:00 மணி இரவு, 9:00 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல், கட்டுப்பாட்டுடன் இருக்க, நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். இதற்கு, பொதுமக்கள் மத்தியில், அமோக வரவேற்பு ஏற்பட்டதையடுத்து, தர்மபுரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பால், பெட்ரோல், காய்கறிகள் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்களை ஏற்றிச்சென்ற ஒரு சில கனரக வாகனங்கள் மற்றும் மருத்துவ சேவைக்கு சென்ற சில வாகனங்கள் மட்டும் சென்றன. இதனால், தர்மபுரி அடுத்த பாளையம்புதூர் டோல்கேட்டில் நாள் ஒன்றுக்கு, 50 ஆயிரம் வாகனங்கள் கடந்த நிலையில் நேற்று, நூற்றுக்கும் குறைவான வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. இதனால், நாட்டின் முக்கிய பங்கு வகிக்கும் இச்சாலை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதே போன்று கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ரயில்வே நிர்வாகம், ரயில் சேவையை நிறுத்தியதால், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனும் நேற்று வெறிச்சோடியது. ஆனாலும், இங்கு நிலைய அலுவலர் உள்ளிட்ட, பணியாளர்கள் நேற்று வழக்கம் போல் பணியாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X