பூட்டியுள்ள கழிவறைகளை திறக்க மக்கள் வலியுறுத்தல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

அரூர்: அரூரில், பூட்டியுள்ள கழிவறைகளை திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், சார் - பதிவாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம், சார்நிலை கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், தாலுகா அலுவலகத்துக்கு வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பூட்டியுள்ள கழிவறைகளை திறக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X