பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : மார் 23, 2020
Share
Advertisement

கால்வாய் வசதி; மக்கள் எதிர்பார்ப்பு: கெலமங்கலம் ஒன்றியம், ஆனைகொள்ளு பஞ்., தொட்டபேளூரில், சாலையோரம் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, மண்ணை வெட்டி மக்கள் கால்வாய் அமைத்துள்ளனர். அவ்வழியாக செல்லும் கழிவுநீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகிறது. தண்ணீர் குழாய் அருகே, கழிவுநீர் தேங்குவதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
பகலில் வீணாக எரியும் விளக்குகள்: ஓசூர் - பெங்களூரு மற்றும் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பகல் நேரங்களில் அடிக்கடி விளக்குகள் எரிகின்றன. பல இடங்களில் இரவில் கூட எரியாத விளக்குகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் பகல் நேரத்தில், வீணாக எரியும் விளக்குகளை கூட அவர்கள் அணைப்பதில்லை. இரவில் தேசிய நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் வசதிக்கு அமைத்த சாலை விளக்குகள், பகல் நேரத்தில் எரிந்து வீணாகுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X