பொது செய்தி

தமிழ்நாடு

மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Added : மார் 23, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி பகுதிகளில் உள்ள மெடிக்கல் ஸ்டோர்களில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மெடிக்கல் ஸ்டோர்களில் உள்ள முக கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்துகளை, ஏராளமான பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். முக கவசத்திற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், அவற்றை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., தெய்வநாயகி தலைமையில், தாசில்தார் தண்டபாணி, வருவாய் ஆய்வாளர் சக்தி ஆகியோர் அடங்கிய குழுவினர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் வேப்பனஹள்ளி பகுதியில் உள்ள மெடிக்கல் ஸ்டோர்களில் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X