பொது செய்தி

தமிழ்நாடு

காலணி தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கக்கோரி மக்கள் போராட்டம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

போச்சம்பள்ளி: வெளிநாட்டு தனியார் காலணி தொழிற்சாலைக்கு, விடுமுறை அளிக்க வேண்டும் என, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டில், வெளிநாட்டு தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 7,800 ஆண்கள் மற்றும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் அச்சம் நிலவி வரும் நிலையில், இந்த தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கவில்லை என, நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. நிர்வாகத்தினர் பேசும்போது, எங்களது தொழிற்சாலை தைவான் நாட்டை சேர்ந்தது. அவர்களிடமிருந்து, எந்த ஒரு அறிவிப்பும் வராமல், எங்களால் தன்னிச்சையாக விடுமுறை அளிக்க முடியாது என கூறியுள்ளனர். இதையடுத்து வெளியே வந்த கிராம மக்கள் கூறுகையில், 'வெளிநாட்டினர் அடிக்கடி இங்கு வந்து செல்வதால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்று (மார்ச், 23) மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம்,' என தெரிவித்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X