பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு உதவி மையம் திறப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில், கொரோனா தடுப்பு மற்றும் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ளவும், ஆலோசனை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள, ஓசூர் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எட்டு படுக்கையுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓசூர் சீத்தாராம் மேடு பகுதியில் உள்ள நகர்புற சுகாதார நிலையம், கொரோனா தடுப்பு மற்றும் உதவி மையமாக தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு, பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளவும், பரிசோதனை செய்து சிகிச்சை பெறவும், எட்டு படுக்கையுடன் கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர், செவிலியர் பணியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா உதவி மையத்தை, மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்தார். சீத்தாராம்மேடு சுகாதார நிலையம், கொரோனா தடுப்பு மற்றும் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளதால், அங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொடர்பான தகவல்களை தெரிவிக்கவும், ஆலோசனை பெறவும், 94873 49744, 94873 45744 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X