தமிழ்நாடு

கைகளை தட்டி நன்றி தெரிவித்த மக்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஓசூர்: கொரோவை வைரசை கட்டுப்படுத்த போராடி வரும், டாக்டர்கள் உட்பட மருத்துவ சேவை மற்றும் பொதுச்சேவையாற்றி வருவோருக்கு, பொதுமக்கள் கைகளை தட்டி நேற்று மாலை நன்றி தெரிவித்தனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், நேற்று காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கு நடத்த, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி ஊரடங்கு நேற்று வெற்றிகரமாக நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, கொரோனா வைரசை கட்டுப்படுத்த தன்னலம் பாராமல் உழைக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உட்பட பல்வேறு பொதுசேவை செய்யும் நபர்களுக்கு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பால்கனி, மொட்டை மாடி மற்றும் வீட்டின் முன்புற பகுதியில் நின்று கொண்டு, கைகளை தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதன்படி, ஓசூர் நகர் பகுதியில் உள்ள ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு, பாகலூர் ஹவுசிங் போர்டு, நஞ்சுண்டேஸ்வரர் நகர் மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும், நேற்று மாலை, 5:00 மணிக்கு, பொதுமக்கள் கைகளை தட்டியும், மணி அடித்தும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர். அதேபோல், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதி பொதுமக்களும் தங்களது நன்றிகளை கைகளை தட்டி தெரிவித்து கொண்டனர். மேலும், சூளகிரி, ஓசூர் டவுன், ராயக்கோட்டை உட்பட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், போலீசார் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர்.


* தர்மபுரி மாவட்டம், அரூரில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, பாட்சாபேட்டை, மாரியம்மன் கோவில் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட இடங்களில், வீதிகளிலும், மொட்டை மாடி, அடுக்குமாடி பால்கனி ஆகியவற்றில், நின்றபடி, கை தட்டி மக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், மணி ஒலித்தனர். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், சுகாதார துறையினருக்கு மக்கள் கை தட்டி நன்றி தெரிவித்தனர்.


* தர்மபுரி நகராட்சி, 14வது வார்டு எம்.ஜி.ஆர்.நகர், மூன்றாவது குறுக்குத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு ஒன்று கூடி, அனைவரும் கைகளை தட்டி நன்றி தெரிவித்தனர். பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினரின் சேவையை பாராட்டி கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் தர்மபுரி நகர் முழுவதும், பல்வேறு பகுதிகளில் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், கைகள் தட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


* தர்மபுரி மாவட்டம், அரூர் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, தீயணைப்பு வீரர்கள் சைரன் ஒலி எழுப்பிய படி, சேவை செய்யும் டாக்டர்களுக்கு கை தட்டி நன்றி தெரிவித்தனர்.


* அரூரில், பாட்சாபேட்டை, மாரியம்மன் கோவில் தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட இடங்களில், வீதிகளிலும், மொட்டை மாடி, அடுக்குமாடி பால்கனி ஆகியவற்றில் நின்றபடி மக்கள் கை தட்டி நன்றி தெரிவித்தனர். அவர்களை அரூர் சப் - கலெக்டர் பிரதாப், டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் உற்சாகப்படுத்தியதுடன், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X