தமிழ்நாடு

கர்நாடகாவில் வேகமாக பரவும் 'கொரோனா': மாநில எல்லையில் அதிகாரிகள் அலட்சியம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

ஓசூர்: கர்நாடகாவில், கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக எல்லையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் குழு, முதல்வரின் உத்தரவையும் மீறி, கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்களை, தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
கர்நாடகாவில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநில எல்லையை மூட, தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். நேற்று முன்தினம் முதல், மாநிலம் முழுவதுமுள்ள எல்லைகள் மூடப்பட்டு, வாகனங்கள் திரும்பி அனுப்பப்பட்டன. ஆனால், தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள, ஓசூர் ஜூஜூவாடி, கக்கனூர், நல்லூர், டி.வி.எஸ்., பூனப்பள்ளி உட்பட பல்வேறு சோதனைச்சாவடிகளில், முதல்வர் உத்தரவுபடி மாநில எல்லைகளை மூடவில்லை. கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழர்கள் அதிகளவில் ஓசூருக்கு வருவதால், வாகனங்களை தடுத்து நிறுத்தும் போது, மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பதாக கூறி, நேற்று முன்தினம் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் அனுமதித்தனர். நேற்று காலை, 7:00 முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், அத்தியாவசிய தேவையுள்ள வாகனங்கள் மற்றும், கர்நாடகாவில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும், தமிழக எல்லையான ஓசூர், ஜூஜூவாடி உட்பட அனைத்து சோதனைச்சாவடிகள் வழியாக, தமிழகத்திற்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். போதிய தெர்மல் ஸ்கேனர் இல்லாததால், அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பரிசோதனை செய்யவில்லை. ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியிலிருந்த ஊழியர்களிடம், நேற்று காலை, லாரி டிரைவர் ஒருவர், தனக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதாக கூறினார். ஆனால் அவரை பரிசோனைக்கு உட்படுத்தாமல், அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இப்படி அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, ஓசூர் வழியாக தமிழகத்துக்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X