பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தபோதும், இறைச்சி கடைகள் திறந்திருந்ததால், கூட்டம் அலைமோதியது. இதனால் நோய் தொற்று பரவுமோ என்ற அச்சத்தில், மக்கள் உள்ளனர்.
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, நேற்று, மக்களாக முன்வந்து நடத்தும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பஸ், ரயில்களும் இயக்கப்படவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், சேலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால், வழக்கத்தைவிட அதிகளவில், கூட்டம் கூடியது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே, மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதை கண்டுகொள்ளாமல், இறைச்சி கடைக்காரர்கள், லாபத்தை மட்டும் முக்கியமாக கருதி, கடைகளை திறந்தது, பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியது. சமூகத்தில் சிலர் செய்யும் தவறு, அனைவரையும் பாதிக்கும் என, விழிப்புணர்வு செய்யும் அதேநேரம், திறக்கப்பட்டிருந்த இறைச்சி கடைகள் குறித்து, காலதாமதமாக தெரிந்து கொண்ட அதிகாரிகள், அதிர்ச்சிக்குள்ளாகினர். இறைச்சி கடைகளில் கூடிய கூட்டம், நோய் கிருமி தொற்று பரவ காரணமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பசியை போக்கிய அம்மா உணவகம்: மக்கள் நலன்கருதி, அம்மா உணவகங்கள், வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக, சேலம், அரசு மருத்துவமனையில், அம்மா உணவகத்தை நம்பி தான், நோயாளிகளுடன் தங்குவோர், பார்வையாளர்கள் உள்ளனர். சில நேரங்களில், நோயாளிகளின் பசியை கூட போக்குகிறது. நேற்று, சுய ஊரடங்கால், அம்மா உணவகம் திறந்த ஒரு மணி நேரத்தில், 1,200 இட்லி விற்று தீர்ந்தது. அதைத்தொடர்ந்து, தயிர், சாம்பார் சாதம் தயாரிக்கப்பட்டது. அதுவும், மதியம், 3:00 மணிக்குள் விற்றுத் தீர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X