பொது செய்தி

தமிழ்நாடு

பீஹார் தொழிலாளர் இருவருக்கு கொரோனா; பவானி அருகே நூல் மில்லுக்கு 'சீல்' வைப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

பவானி: பவானி அருகே, நூல் மில் தொழிலாளர் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மில்லுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மில் உரிமையாளர் குடும்பத்தினர் உள்பட ஒன்பது பேர், கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள மைலம்பாடி, போத்தநாயக்கனூரில் கே.எஸ்.,யார்ன் நூல் மில் உள்ளது. இங்கு பீஹார் மாநிலத்தை சேர்ந்த, ஐந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சகோதரர்களான கஞ்சன்குமார், ரஞ்சன்குமார், ஹோலி பண்டிகைக்காக பீஹார் சென்றனர். கடந்த, 19ல் நூல் மில்லுக்கு பணிக்கு திரும்பினர். இந்நிலையில் கஞ்சன்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சகோதரர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு, 'கொரோனா' தொற்று இருப்பது தெரிய வந்தது. இருவரும் தனி வார்டில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து நூல் மில்லில், ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், வெளிமாநிலத்தவர் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத காரணத்தால் தொழிற்சாலைக்கு சீல் வைத்து, மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டார். மில்லுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இதுகுறித்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: பீஹார் இளைஞர்களுடன் தங்கியிருந்த, அம்மாநிலத்தை சேர்ந்த மற்ற மூவர், மில் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த, ஆறு பேர் என ஒன்பது பேர், 28 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர். அப்பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X