பொது செய்தி

இந்தியா

கொரோனா தாண்டவம்: தொடரும் பங்குச்சந்தை வீழ்ச்சி - வர்த்தகம் 45நிமிடம் நிறுத்தம்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
CoronaVirus, Sensex, Nifty, BSE, ShareMarket, Mumbai, கொரோனா வைரஸ், செக்செக்ஸ், நிப்டி, பங்குச்சந்தைகள், வீழ்ச்சி, சரிவு

மும்பை : கொரோனா அச்சுறுத்தலால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்றைய (மார்ச் 23) வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 2700 புள்ளிகளும், நிப்டி 780 புள்ளிகளும் வீழ்ந்த நிலையில் ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 3500, நிப்டி 1000 புள்ளியும் சரிவை சந்தித்தன. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 10 சதவீதம் அளவுக்கு சரிந்ததால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால் இந்தியா மட்டுமல்லாமல் உலக பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்த நிலையில் இன்றும் (மார்ச் 23) கடும் சரிவுடன் தொடங்கியது.


latest tamil newsஇன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,727.04 புள்ளி சரிந்து 27,188.92 ஆகவும், நிப்டி 789.05 புள்ளிகள் சரிந்து 7956.40 ஆகவும் வர்த்தகமாகின. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் வீழ்ச்சியடைந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்செக்ஸ் 10 சதவீதம் அளவுக்கு சரிந்ததால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.

நண்பகல் 12.30மணியளவில் சென்செக்ஸ் 3578.05 புள்ளிகள் சரிந்து 26,337.90ஆகவும், நிப்டி 1026.85 புள்ளிகள் சரிந்து 7,718.60ஆகவும் சரிந்து வர்த்தகமாகின.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202018:56:42 IST Report Abuse
பொன்னம்பலம் S உலக பங்கு சந்தைகள் போல இந்திய பங்கு சந்தையிலும் லாபம் நோக்கி விற்பனை செய்ய படுவதால் மட்டுமே இந்த வீழ்ச்சி, நீங்கள் சொல்வது போல் கொரனா வைரஸ் பரவல் என்றால் , அதுக்கு மூல காரணகர்த்தாவான சீனாவில் இந்திய பங்கு சந்தை போல் 35 வீழ்ச்சி இல்லை,அதை போலவே தொடர்ந்து வீழ்வதும் நடக்காத விஷயம், அதற்கு தான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த எழுச்சி. இந்த எழுச்சிக்கும் சில காரணங்கள் தேவைப்படுகிறது, அவற்றில் ஒன்று தான் மோடியின் உரை. இதை தான் பங்கு சந்தை நிபுணர்கள் சொல்லுவது Fundamental என்று.
Rate this:
Share this comment
Cancel
shoba -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202018:30:03 IST Report Abuse
shoba Hahahhaha....height of carona comedy
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
23-மார்-202014:36:06 IST Report Abuse
Madhav பங்கு சந்தை வீழ்ச்சி அதில் வியாபாரம் செய்பவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. சாமானியர்களின் சேமிப்பு முழுக்க பிஎப் எல்ஐசி மற்றும் இதர சேமிப்புகள் வழியாக பெரும்பாலும் பங்கு சந்தையிலேயே உள்ளன. இந்த நிலையில் பங்கு சந்தை வீழ்ச்சி என்பது அனைவரையும் பாதிக்கும் நிகழ்வு. மேலும் பங்கு சந்தையை நிலைநிறுத்தவோ உயர்த்தவோ நினைத்து எல்ஐசி பணத்தை கொண்டு வீழும் பங்குகளை வாங்கி எல்ஐசியை அழித்து விடவேண்டாம். கடந்த வாரத்தில் எல்ஐசி பணத்தினால் 5000 புள்ளிகள் செயற்கையாக உயர்த்தப் பட்டது. இது எல்ஐசியை பாதிக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X