பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மார் 23, 2020
Share
Advertisement

மின் பெட்டியை பராமரிக்கணும்! கரூர், தான்தோன்றிமலை அசோக்நகர், இரண்டாவது கிராசில் தாழ்வான நிலையில் மின்சார பெட்டி உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாததால், யார் வேண்டுமானாலும் மின்பெட்டியை தொட்டுவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக, மின்பெட்டி கதவுகள் பூட்டு இல்லாமல் இருப்பதால், விளையாட்டாக சிறுவர்கள் தொட வாய்ப்புள்ளது. இதனால், அவர்கள் மின் விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால், மின் பெட்டிகளை உயரமான இடத்தில் வைத்து, பூட்டி வைக்க வேண்டும்.
சாலையில் விபத்து வாய்ப்பு: கரூர், நரிக்கட்டியூர் செல்லும் சாலையில் விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அதை தெரிந்து கொள்ளும் வகையில், வேகத்தடையில், என்ற வெள்ளை வண்ண கோடுகள் இல்லை. இரவில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது சரிவர தெரியாமல், விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வேகத்தடை இருப்பது தெரியும் வகையில், வெள்ளைக் கோடு வரைய வேண்டும்.

குழாய் சேதம்; குடிநீர் வீண்: கரூர் நரிக்கட்டியூர் தமிழ்நகரில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதில், தண்ணீர் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள திருகு குழாய் சேதமடைந்து, தண்ணீர் வீணாகிறது. குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர், தொட்டியை சுற்றி, கழிவுநீராக தேங்கி நிற்கிறது. இந்த நல்ல தண்ணீரில் இருந்து, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. பொது குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

குப்பை எரிப்பு புகையால் அவதி: கரூர், பசுபதிபாளையம் தொழிற்பேட்டை சாலையோரத்தில் குப்பை குவிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து கிடங்குக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, துப்புரவு பணியாளர்கள் குப்பையை, தீ வைத்து எரிப்பதால், புகை மூட்டம் அதிகளவில் பரவுகிறது. இதனால், கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதுடன், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு, மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், கீழே விழுந்து விபத்திலும் சிக்குகின்றனர்.

வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை: கரூர், அமராவதி ஆற்றில், பசுபதி பாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இறக்கத்தில் ரவுண்டானா இரண்டு பிரிவு சாலை உள்ளது. பாலத்தில் இருந்து கீழே வரும் வாகனங்கள் இறக்கத்தில் வேகமாக வருகின்றன. ரவுண்டானா பகுதிக்கு வந்ததும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர். அப்போது, சாலை சந்திப்பதால் வாகனங்கள் முட்டி மோதுகின்றன. இந்த சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X