தமிழ்நாடு

வெறிச்சோடிய கரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

Added : மார் 23, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும், வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், உலகளவில் மக்கள் அதிகம் கொண்டு நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் நேற்று காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, பிரதமர் நரேந்திர மோடி, வெளியில் நடமாட வேண்டாம் என, நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக அரசு உத்தரவால், நேற்று மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், லாரிகள், வேன்கள், ?ஷர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

வெறிச்சோடிய கரூர் பஸ் ஸ்டாண்ட்: ஊரடங்கு உத்தரவால், கரூரில் பஸ் ஸ்டாண்ட் நேற்று வெறிச்சோடி இருந்தது. 160 க்கும் மேற்பட்ட பஸ்கள், திருமாநிலையூரில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டது. மேலும், கரூர் நகரம், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம், தென்னிலை, சின்னதாராபுரம், க.பரமத்தி, வெள்ளியணை, புலியூர், பசுபதி பாளையம், மாயனூர் உள்ளிட்ட பகுதி களில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. திறக்கப்பட்ட சில இறைச்சி கடைகள், டீ கடைகள் அனைத்தும் நேற்று காலை, 9:00 மணிக்கு மூடப்பட்டது.

கரூர் வந்த 3 ரயில்கள்: கரூரில் இருந்து சேலம் வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலும், திருச்சியில் இருந்து கரூர் வழியாக சேலம் வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயிலும் நேற்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், டேராடுன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும், கரூர் வழியாக சென்றன. அதில், கரூர் வந்த பயணிகள் அனைவருக்கும், காய்ச்சல் உள்ளதா என, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, அவரவர் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

உணவு பொட்டலம் வழங்கல்: கரூர் ரயில்வே ஸ்டேஷன், மற்றும் பஸ் ஸ்டாண்ட்டுகளில் சில வெளியூரை சேர்ந்த பயணிகள் இருந்தனர். அவர்கள் உள்பட, கரூர் நகரில் ஆதரவற்றவர்களுக்கு, சமூக அறக்கட்டளை சார்பில், சாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகள்: கரூர் நகரில் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ள ஜவஹர் பஜார், திருச்சி சாலை, கோவை சாலைகளில், பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கும். ஆனால், நேற்று ஊரடங்கு உத்தரவையொட்டி, கரூர் நகரப்பகுதிகளில் முக்கிய தெருக்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது.

டோல்கேட்டில் அமைதி: கரூர்-திருச்சி சாலையில் மணவாசியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. நேற்று பெரும்பாலான வாகனங்கள் ஓடாததால், மணவாசி டோல்கேட் வெறிச்சோடி இருந்தது. அதில், இருந்த ஊழியர்கள் ஜாலியாக பொழுதை கழித்தனர்.

களை இழந்த மாயனூர் கதவணை: கரூர் அருகே மாயனூரில், காவிரியாற்றின் குறுக்கே கதவணை உள்ளது. வாரந்தோறும் ஞாயிறு கிழமையில் மீன் வாங்கவும், பூங்காவில் பொழுதை கழிக்கவும், பொதுமக்கள் குடும்பத்துடன் வருவது வழக்கம். ஆனால், ஊரடங்கு உத்தரவால் மாயனூர் கதவணை பகுதிகள், களை இழந்து காணப்பட்டது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக, மீன் விற்பனை குறைந்து விட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு இருந்த போதும், கரூர் நகரில் நேற்று அதிகாலை டீ கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் சில திறக்கப்பட்டன. இதுகுறித்து, பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனால், ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, எஸ்.பி., பாண்டியராஜன், கரூர் நகரப்பகுதிகளில் நேற்று காலை, பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X