பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவால் நேற்று முன்தினமே நடந்த காது குத்து

Added : மார் 23, 2020
Share
Advertisement

கரூர்: ஊரடங்கு உத்தரவால், கரூரில் நேற்று நடக்க விருந்த காதணி விழா, நேற்று முன்தினமே நடந்தது. கரூர் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுபவர் சுந்தரம், 38; இவரது மனைவி விஜயசாரதி, 32; கரூர் அரசு மருத்துவ கல்லூரியில், நர்சாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் தானிஷ் குமாருக்கு, கரூர் அருகே தான்தோன்றிமலையில் உள்ள, திருமண மண்டபத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு காதணி விழா நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நேற்று காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், காதணி விழாவை நேற்று முன்தினம் மாலை நடத்த, சுந்தரம்-விஜயசாரதி தம்பதியினர் முடிவு செய்தனர். இதையடுத்து நண்பர்கள், உறவினர்களுக்கு மொபைல் போன், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதள சேவைகள் மூலமாக தகவல் அனுப்பினர். பிறகு, நேற்று தானிஷ் குமாருக்கு நடக்கவிருந்த, காதணி விழா நேற்று முன்தினம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X