பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் தகவல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, கரூர் கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சுகாதாரத்துறை சார்பில் தற்காலிக மருத்துவ முகாம்கள், பஸ் ஸ்டாண்ட் உட்பட பொது இடங்கள் என மக்கள் கூடும் பகுதிகளில், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், கொரோனா தடுப்பு குறித்து, தமிழக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படங்கள், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன எல்.இ.டி.வாகனம், உள்ளுர் கேபிள் 'டிவி' சேனல்கள் மூலம் திரையிடப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கோவில்களுக்கு செல்பவர்கள் முறையாக கை கழுவி, கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா குறித்த சந்தேகங்களை தெரிந்துகொள்ள 104 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 1077 என்ற எண்ணிற்கும், 04324256306, 04324255340 என்ற எண்களிலோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X