பொது செய்தி

தமிழ்நாடு

சப்-கலெக்டர் தலைமையில் நில அளவீடு; மக்கள் எதிர்ப்பு

Added : மார் 23, 2020
Share
Advertisement

குளித்தலை: கல்லடை பஞ்சாயத்தில், மலை பகுதியில் தனி நபர்களுக்கு நிலம் வழங்க, அளவீடு செய்ய வந்த, குளித்தலை சப்-கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., பெருமாள் கோவில் மலைப்பகுதியில், 160 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. கரூர் கலெக்டராக அண்ணாமலை இருந்தபோது, 55 ஏழை மக்களுக்கு கோவில் மலைப்பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை நகர் என்றும், தற்போது திருமலை நகர் என்றும் மக்கள் அழைத்து வருகின்றனர். மலை அடிவாரம் பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது, மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மரங்களை பராமரித்து வந்தனர். மேலும், கால்நடைகளை மேய்த்து பிழைத்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குளித்தலை சப்-கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில், குளித்தலை தாசில்தார் ரத்தினவேலு, ஆர்.ஐ., நீதிராஜன் உட்பட நில அளவை, வருவாய்த்துறையினர் பெருமாள் கோவில் மலைப்பகுதியில், தனியாருக்கு நிலம் வழங்கிட நிலஅளவை, ஆய்வு பணி மேற்கொள்ள வந்தனர். தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் இலக்குவன் தலைமையில், திருமலை நகர் மக்கள், குளித்தலை சப்-கலெக்டரிடம் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருவதாகவும், வீட்டுவரி உட்பட பல்வேறு வரிகளை செலுத்தி வருவதாகவும், இயற்கை வளங்களை பாதுகாத்து வருவதாகவும் கூறி, தனியாருக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இதற்கு சப்-கலெக்டர் ?ஷக் அப்துல் ரஹ்மான், ''நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். உங்கள் மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X