தமிழ்நாடு

நாமக்கல்லில் ஈரோடு மாவட்ட எல்லைகளுக்கு 'சீல்'

Added : மார் 23, 2020
Share
Advertisement

நாமக்கல்: ஈரோடு முடக்கப்பட்டுள்ளதால், அதன் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் முழுவதும், நேற்று மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். மாவட்டம் முழுவதும், பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஊரடங்கின் போது, வெளியே வாகனங்களில் வந்தவர்களை பிடித்து, ஹெல்மெட் அணியாதது, உரிய ஆவணம் இன்றி சென்றது, போதையில் வாகனம் ஓட்டியது என, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, நாமக்கல் எஸ்.பி., அருளரசு கூறியதாவது: சாதாரண வழக்காக ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஆவணம் இன்றி வாகனம் ஓட்டியது என, நாமக்கல் மாவட்டத்தில், 500 வழக்குக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு முடக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்ட எல்லையை சீல் வைக்க சொல்லியுள்ளேன். அதன்படி, கொக்கராயன்பேட்டை, ஓடப்பள்ளி தடுப்பணை, சோழசிராமணி தடுப்பணை மற்றும் பள்ளிபாளையம் ஆகிய, ஈரோடு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து யாரும் அங்கு போகக்கூடாது; போனால் வரக்கூடாது. அதேபோல், அங்கிருந்து யாரும், இங்கு வரக்கூடாது. அப்படி வருவதாக இருந்தால், எங்கு போகிறார் என்ற முகவரியை கொடுத்து செல்ல வேண்டும். தாய்லாந்தில் இருந்து வந்த ஐந்து பேரில், இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேரும், 153 பேரை தொட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அதனால், ஈரோடு மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. போலீசாரும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X