பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : மார் 23, 2020
Share
Advertisement

குப்பை எரிப்பு; புகையால் தவிப்பு: குமாரபாளையம் அருகே, சாணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி எதிரில் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை, பள்ளி செயல்படும் நாட்களில் மாணவ, மாணவியருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. இந்த குப்பை எரியும் இடத்தில் உள்ள பனை மரம் இந்த தீயில் சிறிது சிறிதாக எரிந்து வீணாகும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்த மரத்தை எரியாமல் காக்கவும், இந்த இடத்தில் குப்பை கொட்டாதிருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயனில்லாத சிக்னல்: பள்ளிபாளையம், பஸ் நிறுத்தம் அருகே, நான்குசாலை சந்திப்பு வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படும். வாகனங்கள் சீராக செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. இது தற்போது செயல்படாமல் காட்சிப் பொருளாக காணப்படுகிறது. தினமும் போலீசார் தான் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிக்னலை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

ஓடையில் முட்புதர் அகற்ற வேண்டும்: பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் சாலையோரத்தில் ஓடை செல்கிறது. இதில் முட்புதர் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படும். அதிகளவு மழை பெய்தால் குடியிருப்புகளுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை சீரமைத்து, மரக்கன்றுகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை பிரிவில் வேகத்தடை தேவை: ப.வேலூர் அடுத்த பரமத்தியில், நாமக்கல், திருச்செங்கோடு, ப.வேலூர் பைபாஸ் செல்லும் வகையில் அமைந்துள்ள, மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. தற்போது திருச்செங்கோடு சாலையில் மட்டும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு சாலைகளிலும் எந்தவித பாதுகாப்பும் இல்லை. குறுகிய வளைவாக உள்ள சாலையில், அசுர வேகத்தில் வரும் வாகனங்களால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மூன்று சாலைகளிலும் வேகத்தடை தேவை.

விதிமுறை மீறும் கனரக வாகனங்கள்: நாமக்கல்லில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு பஸ் வசதி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், ஈரோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கு ஒருவழிப்பாதையாக பூங்கா சாலை, கோட்டை சாலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், லாரி, டாரஸ், டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த சாலையில் கனரக வாகங்கள் அதிக பாரம் ஏற்றிகொண்டு சென்று வருகின்றன. விதிமீறும் வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X