பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லை தனி முட்டை மண்டலமாக அறிவிக்க கோரிக்கை

Added : மார் 23, 2020
Share
Advertisement

ராசிபுரம்: 'நாமக்கல்லை தனி முட்டை மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.,யுமான சுந்தரம் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் லாரி போக்குவரத்து, கோழி முட்டை உற்பத்திக்கு பெயர்பெற்ற நகராகும். இந்தியாவிலேயே கோழி முட்டை, கோழி குஞ்சு உற்பத்தியில் முதன்மையாக திகழ்கிறது. நான் எம்.பி.,யாக இருக்கும்போது, கோழிப்பண்ணையாளர்கள் நலனுக்காக பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்திய உணவு உற்பத்தி கழகத்தில் உபயோகமில்லாத உணவுகளை நாமக்கல் கோழிபண்ணைக்கு அனுப்புவது தொடர்பாகவும், தமிழகத்தில் பறவை காய்ச்சல் நிலை குறித்தும், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு, தமிழகத்தை தனி முட்டை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் மனு கொடுத்துள்ளோம். தற்போது, கேரளாவிற்கு வரும் வெளிநாட்டவர்களால் பறவை காய்ச்சல் வந்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிமுட்டை, கோழி கறி விலை பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தனி முட்டை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X