பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பங்கேற்றவர்களுக்கு கைகள் தட்டி நன்றி

Added : மார் 23, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாமக்கல்லில் பொதுமக்கள் கைகள் தட்டி தங்களது நன்றி தெரிவித்தனர்.
பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க, நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு நடந்தது. இதில் வர்த்தகர்கள், லாரி உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பலர் தங்களுடைய வீடுகளில் இருந்தபடி ஊரடங்கில் பங்கேற்றனர். மருத்துவ துறையினர், போலீசார், உள்ளாட்சி துறையினர், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை, 5:00 மணிக்கு பொதுமக்கள் கைகளை தட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, நாமக்கல் நகரில் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வரிசையாக நின்று கைகள் தட்டும் நிகழ்ச்சி நடத்தினர். ஆஞ்சநேயர் கோவில் வீதி, சந்தைபோட்டைபுதூர், தில்லைபுரம், ஏ.எஸ்.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து, 10 நிமிடம் கைகளை தட்டி நன்றியை தெரிவித்தனர்.


* குமாரபாளையம் போலீசார் சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பகுதி ஆகிய இடங்களில் போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள சைரன்களை ஒலி எழுப்ப செய்து, அரசு உத்திரவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர். அந்தந்த பகுதிகளில், பொதுமக்கள் பெருமளவில் திரண்டு நின்று கைதட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X