சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மமான முறையில் இறந்த மயில்

Added : மார் 23, 2020
Share
Advertisement

மோகனூர்: மோகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தேசிய பறவையான மயில், அதிகளவில் சுற்றித்திரிகிறது. காவிரி ஆற்றங்கரை, வயல் வெளி மற்றும் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை, கூட்டம் கூட்டமாக செல்லும் மயில்கள் தின்று நாசம் செய்து வருகிறது. அதனால், அவற்றை அப்புறப்படுத்துவதற்கு வழியின்றி, விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர். இந்த மயில்கள், மோகனூர் நகரப்பகுதிக்குள் வந்துள்ளன. இந்நிலையில், மோகனூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள வாய்க்கால் கரையில், மர்மமான முறையில் ஆண் மயில் இறந்து கிடந்தது. மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் அளித்தனர். அவரது உத்தரவின் படி, வனவர் திலகவதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்துகிடந்த மயிலை மீட்டு சென்றனர். ஆண் மயில் எப்படி இறந்தது என்பது குறித்து, பிரேத பரிசோதனை செய்த பிறகே தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X