சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது; உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement

ஜெனிவா: கொரோனா பாதிப்பை, சீனா தீவிரமான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தியுள்ளதால், உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.



latest tamil news



சீனாவின் வூகான் நகரில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக, கொரோனா என்ற கொடிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நோய் வேகமாக பரவியதால், வூகான் நகரை தனிமைப்படுத்தியது. 10 நாட்களில் பெரிய மருத்துவமனையை கட்டி முடித்து, கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தது. அந்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களை, வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லலை.
இதனால் படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து, கொரோனாவுக்கு எதிராக வெற்றிபெற்றது. கடந்த 4 நாட்களில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆகையால் சீனாவின் தீவிரமான இந்நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு பாரட்டியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-மார்-202020:29:33 IST Report Abuse
Rajagopal சீனாவும் மற்ற நாடுகளைப்போல தும்பை விட்டு வாலைப் பிடித்திருக்கிறது. அவர்களும் டிசம்பர் மாதத்தில் இந்த வைரஸ் வந்த பொது அலட்சியமாக இருந்து விட்டார்கள். அது கட்டுக்கடங்காமல் போன பின், அதிகார பலத்தை வைத்து எல்லாவற்றையும் ஒடுக்கினார்கள். நான் பார்த்த விடீயோக்களில் சில இடங்களில் மக்கள் வெளியே வரக்கூடாதென்று கட்டிடக் கதவுகளை வெல்டிங் செய்தார்கள். எத்தனை பேர் உண்மையில் இறந்தார்கள் என்று வெளியுலகத்துக்குத் தெரியாது. உண்மையை மூடி மறைப்பதில் அவர்கள் வல்லவர்கள். இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் குறைந்து விட்டார்கள் என்று அவர்கள் சொல்வதை எப்படி நம்புவது? நம் ஊரில் ஆட்டு மந்தைகளை போல மக்கள் இருப்பதால், இந்த வைரஸ் இன் தாக்கம் இனிமேல்தான் தெரியும். வெப்பம் அதிகரிப்பதால் எல்லாம் குறைந்த மாதிரி இருக்கும். ஆனால் அக்டோபர் முதல் வெப்பம் குறைந்து, குளிர் ஆரம்பிக்கும்போது மிகவும் பெரிய அளவில் தலை விரிக்கும். அப்போது இன்னும் பல கோடி பேர்களுக்கு பரவியிருக்கும். என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது.
Rate this:
Cancel
23-மார்-202019:31:22 IST Report Abuse
நக்கல் சீனாக்காரன் பொய் சொல்லுறான்... பரப்பி விட்டதே இவங்கதான்... இன்னும் கொஞ்ச நாளில் மருந்து கண்டுபிடித்த மாதிரி வெளில சொல்லுவான்... இது இவங்க கிட்ட ஏற்கனவே இருக்கும்... எல்லாம் ஒரு நாடகமாக இருக்க வாய்ப்புள்ளது.... பக்கிகள் வேணா இதை நம்பும்....
Rate this:
Cancel
Senthil kumar - coimbatore,இந்தியா
23-மார்-202019:02:49 IST Report Abuse
Senthil kumar சைனாக்காரன் கறி சோறு தின்னதுக்கு மொத்த உலகமும் கைகழுவ வேண்டியிருக்கே ஆண்டவா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X